பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூரில் மாநில அளவிலான மிஸ்டர் ஆணழகன் போட்டி நடைபெற்றது.
தனியார் கல்லூரி அரங்கத்தில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் செங்கல்பட்டு, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
எடை பிரிவு வாரியாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் பலரும் தங்களது உடற்கட்டமைப்புகளை வெளிபடுத்தி அசத்தினர்.
















