புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் மார்கழி மஹோத்சவத்தின் ஒரு பகுதியாகப் பக்தி இசை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் நடைபெற்ற பக்தி இசை சங்கமம் நிகழ்ச்சியில், டாக்டர் ஜெயந்தி எஸ்.ரவியின் “நாமசங்கீர்த்தனம்”, ரமேஷ் சீனிவாசன் குழுவினரின் “குரு சமர்ப்பணம்” நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் ஆண்டாள், கிருஷ்ணர் வேடமணிந்தது குழந்தைகள் பங்கேற்றது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. பின்னர், தமிழ், இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் பக்தி பாடல்கள் பாடப்பட்டன.
















