மகளிருக்கான “குளோபல் பீஸ் கோப்பை” கால்பந்து தொடர் கோவை மாவட்டம் பேரூரில் இன்று தொடங்க உள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின் நிறுவனர் ஜனனி, இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 32 அணிகள் பங்கேற்க உள்ளதாகவும் 12, 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கிராமப்புற பெண்களுக்கு விளையாட்டுகள்மூலம் அதிகாரம் அளிப்பதே கேர்ள்ஸ் பிளே குளோபல் அமைப்பின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.
















