வாக்காளர் சிறப்பு முகாமிற்கு அதிகாரிகள் வரவில்லை என மாஞ்சோலை கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் முடிந்து, கடந்த 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
மாஞ்சோலையில் வாக்குரிமை பெற்றிருந்த ஆயிரத்து 906 வாக்காளர்களில் 79 பேரின் பெயர்கள் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால் மாஞ்சோலை மலை கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பிழைப்பிற்காகத் தற்காலிகமாக வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்றாலும், தங்கள் பிறப்பு மற்றும் வளர்ப்பு அனைத்தும் இந்த மண்ணில்தான் எனக்கூறிய மக்கள் தங்களுக்கு மிகப்பெரிய அநீதி நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டினர்.
இதனை தொடர்ந்து, மாஞ்சோலை வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களுக்கு அதிகாரிகள் வரவில்லை என வேதனை தெரிவித்தனர்.
இது தொடர்பாக, உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
















