திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முடியால் தவித்த மாற்றுத்திறனாளி இளைஞருக்குக் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உதவிய சம்பவம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
திருச்சியை சேர்ந்த தமிழழகன் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் சனீஸ்வரன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட நாட்கள் முயற்சித்துள்ளார்.
ஆனால் உடல் ரீதியாகப் பயணம் செய்ய முடியாமல் தவித்த அவர் கோயில் நிர்வாகத்தின் இணைய பக்கத்தில் தனது வேதனை கருத்துகளை பதிவிட்டார்.
இதனையறிந்த காரைக்கால் மாவட்ட ஆட்சியர், தமிழழகனை காரில் அழைத்துச் சென்று விஐபி தரிசனத்திற்கு அனுமதிக்க உத்தரவிட்டார்.
அதன்படி சுவாமி தரிசனம் செய்த இளைஞர் தமிழழகன் மாவட்ட ஆட்சியருக்கும், கோயில் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தார்.
















