மதுரை மாவட்டம் சிறுமலை வனப்பகுதியில் பற்றி எரியும் தீயால் பல்வேறு அரியவகை மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.
பாலமேடு அடுத்த சத்திரவெள்ளாளப்பட்டியில் உள்ள சிறுமலை வனப்பகுதியில் மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன.
இந்தநிலையில், வனப்பகுதியில் நேற்றிரவு திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மளமளவெனப் பரவிய தீ, சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், வனத்துறை ஊழியர்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீயில் அரியவகை மூலிகை மரங்கள், செடிகள் கருகி சாம்பலானதாகக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
















