மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள தங்கும் விடுதிகளில் வங்கதேசத்தினர் தங்க அனுமதி கிடையாது என விடுதி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதன் காரணமாக அங்குப் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.
மேலும் அங்கு உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் இந்தியாவுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இந்தியா- வங்கதேச எல்லையான மேற்குவங்கத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தளமான சிலிகுரியில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்க வங்கதேசத்தினருக்கு அனுமதி கிடையாது என விடுதி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகத் தங்களுக்கு பொருளாதார ரீதியாக அதிக இழப்பு ஏற்பட்டாலும் நாட்டின் நலனே முக்கியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தை சேர்ந்தவர்கள், மருத்துவம், தொழில், உயர்கல்வி உள்ளிட்டவைக்காகச் சிலிகுரிருக்கு அதிகளவில் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
















