சேலம் மாவட்டம், ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் சிக்கித் தவித்தனர்.
ஏற்காட்டில் வார விடுமுறை தினத்தையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அதிகளவிலான வாகனங்களின் வருகையால் அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக ஒரே இடத்தில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அனைத்து சுற்றுலா தலங்களையும் சுற்றிப் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















