சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் உட்பட ஏழு விரைவு ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நேர மாற்றம் ஜனவரி ஒன்றாம் முதல் அமலுக்கு வரும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் இரண்டு 45 மணிக்கு திருநெல்வேலிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், இனி பிற்பகல் மூன்று 5 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் – கொல்லம் இடையேயான விரைவு ரயில், மாலை ஐந்து 27 மணிக்கு பதிலாக, மாலை ஐந்து 15 மணிக்கு புறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் வைகை விரைவு ரயில், மதியம் ஒன்று 45 மணிக்கு பதிலாக, முன்னதாகவே பிற்பகல் ஒன்று 15 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் – தூத்துக்குடி இடையேயான முத்துநகர் விரைவு ரயில் ரயில், சென்னையில் இருந்து இரவு 7 முப்பது மணிக்கு பதிலாக முன்னதாகவே ஏழு 15க்கு புறப்படும்.
இதேபோல் சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையேயான பொதிகை விரைவு ரயில், இரவு எட்டு 10 மணிக்கு பதிலாக, இரவு ஏழு 35 மணிக்கே புறப்படுகிறது.
எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சேது விரைவு ரயில், மாலை ஐந்து 45 மணிக்கு பதிலாக, இனி சென்னையில் இருந்து மாலை ஐந்து 55 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
















