தமிழக மீனவர்களின் பிரச்னையில், இலங்கை அரசின் செயல்பாடுகளை கவனித்து கொண்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்த மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எஸ்.பி சிங்கிற்கு, கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதர் சன்னதிகளில் எஸ்.பி.சிங் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமேஸ்வரத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்கான திட்டங்களை மத்திய அரசு சிறப்பாக செய்து வருவதாக கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில், கூடுதல் தொகுதி பங்கீடு குறித்து கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.
மேலும், தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக இருநாட்டு மீன்வளத்துறை அமைச்சர்களும் ஆலோசித்து வருவதாகவும், தமிழக மீனவர்களின் நலன்களை மத்திய அரசு பாதுகாக்கும் எனவும் மத்திய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் தெரிவித்தார்.
















