கொடிய ஆயுதங்களை கைகளில் வைத்திருப்பது திமுக ஆட்சியில் இயல்பாக நடக்கும் ஒன்றாக உள்ளது என்று முன்னாள் பஜாக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சேர்ந்த மகாராஷ்டிராவை தொழிலாளி சூரஜ் மீது கஞ்சா போதையில் இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக கழுத்தில் கத்தி வைத்ததை தட்டிக்கேட்டதொழிலாளி மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றஞ்செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும் , இந்த நிலையே திமுக ஆட்சியில் நீடிக்கிறது என்று கூறிய அண்ணாமலை, போதைப்பொருட்கள் மிக எளிதில் கிடைப்பது, வன்முறையை போற்றுவது போன்றவையே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
கொடிய ஆயுதங்களை கைகளில் வைத்திருப்பது திமுக ஆட்சியில் இயல்பாக நடக்கும் ஒன்றாக உள்ளது என்றும் ஒழுக்கமான மாநிலமாக இருந்த தமிழகத்தை, காட்டுமிராண்டித் தனமாக மாற்றியதற்கு திமுக பொறுப்பேற்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
















