எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும் ஆழ்கடல் அரக்கன் : K-4 அணுஆயுத ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த இந்தியா!
Sep 13, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும் ஆழ்கடல் அரக்கன் : K-4 அணுஆயுத ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த இந்தியா!

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 07:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இடைநிலை தூர நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணையான K-4 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அணுசக்தி நாடுகளிலேயே சீனாவும், இந்தியாவும் மட்டும் தான் முதலில் அணுசக்தியைப் பயன் படுத்துவதில்லை என்ற கொள்கையை வைத்துள்ளது. அதற்காக இந்தியா அணுசக்தி திறனை மேம்படுத்தாமல் இல்லை. ஆனால்,எதிரி முதலில் அணுசக்தியால் தாக்கினால், திருப்பித் தாக்கும் ஆற்றலைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

இதற்காக இந்தியாவின் ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த நாட்டின் ஏவுகணை நாயகனும் முன்னாள் குடியரசு தலைவருமான ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கே-தொடர் ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. சமீபத்தில், தனது அணுசக்தித் திறனைப் பறைசாற்றும் விதமாக, அணுசக்தித் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஒரு நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.

ஐஎன்எஸ் அரிஹந்த் மற்றும் ஐஎன்எஸ் அரிகட் இதில் எந்த நீர்மூழ்கிக் கப்பல் எந்த ஏவுதலை நடத்தியது என்பது அதிகாரப் பூர்வமாகஅறிவிக்கப் படவில்லை என்றாலும் புதிய கே-4 ஏவுகணை, வங்காள விரிகுடாவில் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு வெகுதொலைவில் ஐஎன்எஸ் அரிஹாட் என்ற அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கே-4 ஏவுகணை, இந்தியாவின் கடல்சார் அணுசக்தித் திறனுக்கு ஒரு பெரும் சான்றாக உள்ளது. இதில் 2.5 டன் எடையுடன் கூடிய அணுகுண்டை சுமந்து செல்ல முடியும் என்பது குறிப்பிடத் தக்கது. இப்போது நடத்தப் பட்டிருக்கும் கே-4 சோதனை இந்தியாவின் இரண்டாவது சோதனையாகும். ஏற்கெனவே நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணையான கே-4, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டது.

இதன் மூலம், தரை, வான் மற்றும் கடலுக்கு அடியிலிருந்து அணு ஆயுத ஏவுகணையைச் செலுத்தக்கூடிய ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றது. இந்தியாவிடம் தற்போது ஐஎன்எஸ் அரிஹந்த் மற்றும் ஐஎன்எஸ் அரிகட் ஆகிய இரண்டு செயல்பாட்டில் உள்ள அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன, மேலும் இரண்டு கப்பல்கள் கடல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

அக்னி-III தரைவழி ஏவுகணையிலிருந்து உருவாக்கப்பட்ட கே-4ஏவுகணை நாட்டின் மிக அதிக தூரம் செல்லக்கூடிய கடல்வழி ஏவப்படும் ஏவுகணையாகும். தரையில் இருந்து ஏவுப்படும் ஏவுகணையில் இருந்து கடலில் இருந்து செலுத்துவதற்காக பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பாலிஸ்டிக் அணுசக்தித் திறன் கொண்ட நீர்மூழ்கிகப்பல் ஒரு உச்சகட்ட இரகசிய வேட்டைக்கான கப்பலாகும். தரைவழி ஏவுதளங்களைப் போலல்லாமல் செயற்கைக்கோள்களுக்குப் புலனாகாமல், ரேடார்களால் கண்டுபிடிக்க முடியாத வகையில் கடலுக்கு அடியில் ஆழத்தில் பதுங்கி நிற்கும். கடலின் ஆழத்தில் மறைந்து இருக்கும் இந்தக் கப்பல், பல ஆண்டுகளுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு அணு உலை மூலம் இயங்கும்.

மெதுவாக நகரும். காலவரையின்றி நீருக்கடியில் இருக்கும். நீர்மூழ்கிக் கப்பலின் பணியாளர்களின் சகிப்புத்தன்மை மற்றும் உணவுப் பொருட்கள் மட்டுமே அத்தியாவசியமானது. இந்தியாவின் அனைத்து நிலத்தடி ஏவுகணைத் தளங்களையும் விமானத் தளங்களையும் அழிக்கும் அளவுக்குப் பேரழிவு தரும் அணுசக்தித் தாக்குதல்களில் கூட, ஆழ்கடலில் பதுங்கியிருக்கும் இந்த நீர்மூழ்கிக் கப்பல், பதிலுக்கு எதிர்ப்பார்க்காத கடுமையான தாக்குதலை நடத்தும்.

இது, இந்தியாவுக்கு எதிரான முதல் அணுசக்தி தாக்குதலை எந்த நாடு நடத்தினாலும், அது அந்நாட்டின் தற்கொலைக்குச் சமம் என்பதை உறுதி செய்கிறது. தற்போது இந்தியாவிடம் INS அரிஹந்த் மற்றும் INS அரிகாட் ஆகிய அணுசக்தியால் இயங்கும் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் சேவையில் உள்ளன. சோதனையில் இருக்கும் அணுசக்தியால் இயங்கும் மூன்றாவது நீர்மூழ்கி கப்பலான INS அரிதமன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கடற்படையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, இன்னும் பெயரிடப்படாத நான்காவது கப்பலும் விரைவில் கடற்படையில் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்தப் பேரழிவு நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்று எல்லா நேரங்களிலும் கடலில் இருக்கும். தனது ஆயுதங்களுடன் ரோந்துப் பணியில் இன்னொரு கப்பல் எப்போதும் சுற்றி வரும். பயிற்சிக் கப்பலாக ஒன்று செயல்படும். நான்காவது கப்பல் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பில் இருக்கும். இதற்கிடையே கே-4 க்குப் பிறகு கே-5 மற்றும் கே-6 ஏவுகணைகளை DRDO உருவாக்கி வருகிறது.

இந்த ஏவுகணைகள் 5,000 கிலோமீட்டர் தூரத்துக்கும் அப்பால் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு ஏற்றாற் போல் இனி உருவாக்கப் போகும் எஸ்5 என்ற நீர்மூழ்கிக் கப்பல்கள், அரிஹந்த் வகுப்பை விட இரு மடங்கு பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலுக்கடியில் யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் மறைந்து இருக்கும் இந்த பெரும் யானைகள்,​​ தேசத்தை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற ஒரு கட்டளைக்காகக் காத்திருக்கின்றன.

Tags: அணுசக்திA formidable force against enemies: India successfully tests the K-4 nuclear missileK-4 அணுஆயுத ஏவுகணைஆழ்கடல் அரக்கன்பாலிஸ்டிக் ஏவுகணைindian armyindian navy
Share
Tweet
SendShare
Previous Post

ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகளை அமைக்கும் பணியில் தீவிரம் : ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 எப்போது? – அச்சத்தில் பாகிஸ்தான்!

Next Post

திருத்தணியில் புலம்பெயர் தொழிலாளர் மீது கஞ்சா போதையில் தாக்குதல் – அண்ணாமலை கண்டனம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies