ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகளை அமைக்கும் பணியில் தீவிரம் : ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 எப்போது? - அச்சத்தில் பாகிஸ்தான்!
Sep 12, 2026, 12:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகளை அமைக்கும் பணியில் தீவிரம் : ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 எப்போது? – அச்சத்தில் பாகிஸ்தான்!

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 07:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 மூலம் இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என அஞ்சும் பாகிஸ்தான் ராணுவம் எல்லையோர பகுதிகளில் புதிய ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகளை அமைத்து வருகிறது.இதுபற்றியய ஒரு செய்தி தொகுப்பு.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா தொடங்கிய ஆப்ரேஷன் சிந்தூரில் ஹார்பி மற்றும் ஹரோப் ஆளில்லா ட்ரோன்களை மட்டுமின்றி, Warmate, SkyStriker, மற்றும் Nagastra ஆகிய வியூக ட்ரோன்களையும் பயன்படுத்தியது. போரை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியதைத் தொடர்ந்து ஆப்ரேசன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டது. ஆனாலும், இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் தொடர்ந்து அசிம் முனீர் தலைமையிலான பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

கடந்த அக்டோபர் 10-ம் தேதி டெல்லி செங்​கோட்டை அருகே கார் குண்டு வெடித்​த​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர்.இந்தத் தாக்குதலின் பின்​னணி​யில் பாகிஸ்​தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட ஜெய்​ஷ்-இ-​முகமது இருப்​பது விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. வெறும் முன்​னோட்​டமான ஆப்ரேஷன் சிந்​தூர் 88 மணி நேரத்​தில் முடிந்​து​விட்​டது என்றும், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தைநிறுத்திக் கொள்ளாதத பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போகும் என்று இந்திய ராணுவத் த் தலைமை தளபதி ஜெனரல் உபந்திர திவேதி கடுமையாக எச்சரித்திருந்தார்.

மேலும், ‘ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 இந்திய இராணுவம் தீவிரமாகத் தயாராகி வருவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படியே முப்படைகளின் ஒருங்கிணைந்த போர் ஒத்திகைகள் மற்றும் தீவிரமான போர்ப் பயிற்சிகள் நடைபெற்றுவருகின்றன. பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸின் எல்லைக்குள் உள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்திருந்தார்.

இவையெல்லாம் பாகிஸ்தானுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட பிரத்யேக ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகளை பாகிஸ்தான் ராணுவம் நிலைநிறுத்தியுள்ளது. முர்ரியின் 12வது காலாட்படைப் பிரிவு மற்றும் கோட்லி-பிம்பர் பகுதியில் உள்ளபடைப்பிரிவுகளைக் கட்டுப்படுத்தும் 23வது காலாட்படைப் பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரஜோரி, பூஞ்ச், நௌஷேரா மற்றும் சுந்தர்பனி ஆகிய இடங்களில் 2வது ஆசாத் காஷ்மீர் படைப்பிரிவும், கோட்லியில் 3வது ஆசாத் காஷ்மீர் படைப்பிரிவும், பிம்பர் பகுதியில் 7வது ஆசாத் காஷ்மீர் படைப்பிரிவும் ஆளில்லா விமான ட்ரோன் எதிர்ப்பு அமைப்புக்களைக் கையாளுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் நிலைநிறுத்தியுள்ள பாதுகாப்பு அமைப்புகளில், ஸ்பைடர் ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பு முக்கியமானதாகும். இது சிறிய சுற்றித்திரியும் வெடிமருந்துகள் மற்றும் பெரிய ஆளில்லா விமானங்களை 10 கிலோமீட்டர் தூரம் வரை கண்டறியும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.

மேலும் தோளில் வைத்துச் சுடும் சஃப்ரா ஆளில்லா விமான ஜாமிங் துப்பாக்கியையும் பாகிஸ்தான் பயன்பாட்டில் வைத்துள்ளது. சுமார் 1.5 கிலோமீட்டர் பயனுள்ள வரம்பைக் கொண்ட இந்த துப்பாக்கி, ஆளில்லா விமானக் கட்டுப்பாடு, வீடியோ மற்றும் ஜிபிஎஸ் இணைப்புகளை சீர்குலைக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டதாகும்.

இதுவரை நடந்த பாகிஸ்தான்- இந்தியா போரில் ஒவ்வொரு முறையும் இந்தியாவே வென்றது. பாகிஸ்தான் காஷ்மீரையும் கைப்பற்ற முடியாமல் கிழக்கு பாகிஸ்தான் முழுவதையும் இழந்ததுதான் வரலாறு. நான்கு போர்களிலும், இந்தியா மீது முதல் குண்டுகளை வீசிய பாகிஸ்தான் தோல்வியடைந்து சரணடைவதே வாடிக்கை என்று பாதுகாப்பு வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Tags: Work on setting up anti-drone systems in full swing: When will Operation Sindoor 2.0 be? - Pakistan in fearஆப்ரேஷன் சிந்தூர் 2.0 எப்போது?PM Modiindian armyopreration sindoorpakistan news
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் தமிழகம், புதுச்சேரிக்கு மிக அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது – சி.பி.ராதாகிருஷ்ணன்

Next Post

எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும் ஆழ்கடல் அரக்கன் : K-4 அணுஆயுத ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த இந்தியா!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies