புதுக்கோட்டையில் உள்ள பல் மருத்துவர் வீட்டில் 25 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் 4-ம் வீதியுள்ள பல் மருத்துவர் ஆனந்த் என்பவரது வீட்டில், கடந்த 20-ம் தேதி 25 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
குறிப்பாகத் தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜா என்ற தனுஷ்கோடி என்பது தெரியவந்தது. .
தொடர்ந்து நாமக்கல் விரைந்த தனிப்படை போலீசார் மொட்டை அடித்து மாறு வேடத்தில் இருந்த குற்றவாளி சுந்தர்ராஜாவை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 23 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த புதுக்கோட்டை டிஎஸ்பி பிருந்தா, வெளியூர் செல்பவர்கள் தங்கள் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் அளித்துவிட்டு செல்வது அவசியம் என எடுத்துரைத்தார்.
















