அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கைகளில் ஏற்பட்ட காயங்கள் மேக்கப்பால் மறைக்கப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான நான்கு ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
அமைதி ஒப்பந்தம்குறித்து, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்பை புளோரிடாவில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டிரம்ப்பின் கைகளில் ஏற்பட்டிருந்த காயம் மேக்கப் மூலம் மறைக்கப்பட்டிருந்தது புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது.
இதனால் 79 வயதான அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நலக்குறைவால் அவதிப்படுவதை மறைப்பதாகப் பலரும் விமர்சித்தனர். இத்தகையை கருத்துகளை நிராகரித்துள்ள வெள்ளை மாளிகை, அடிக்கடி கைகுலுக்குதலால் ஏற்பட்ட திசுவின் சேதமே அதற்குக் காரணம் எனக் கூறியுள்ளது.
இருப்பினும் அவரது கையில் உள்ள தழும்புகள் அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கான அடையாளம் எனக் கூறும் நெட்டிசன்கள், டிரம்ப் எதை மறைக்க முயற்சிக்கிறார்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
















