கர்நாடகா மாநிலம், மைசூர் அருகே சினிமா பாணியில் பட்டப்பகலில் நகைக் கடைக்குள் புகுந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மைசூர் அருகே உள்ள ஹன்சூரில் கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான நகைக் கடை இயங்கி வந்தது.
திடீரென அந்தக் கடைக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 5 பேர், ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டித் தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பினர்.
திருடு போன நகைகளின் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. பட்டப்பகலில் நடந்த இந்தக் கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ள போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
















