தேசிய நலன் மீது பற்று கொண்ட காரணத்தால் பிரதமர் மோடி உயர் பதவியை அடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நமோத்சவ் என்ற நிகழ்ச்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
அப்போது உரையாற்றிய அவர் பிரதமர் மோடி உறுதியான நிலைப்பாடு கொண்ட தலைவர் எனவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவர் 29 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்ற பிரதமர் என்ற அளவில் உயர்ந்துள்ளார் எனவும் தெரிவித்தார்.
















