கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாகத் தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் 6 மணிநேரமாக விசாரணை மேற்கொண்டனர்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் ஆஜராகினர்.
அப்போது அவர்களிடம் 6 மணி நேரமாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அனுமதி கடிதம், வீடியோ ஆதாரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை வைத்து சிபிஐ அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
















