நெல்லை பழவூர் அருகே மாநில அளவிலான பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் பழவூர் அருகே யாக்கோபு புரத்தில் பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்றம் நடத்தும் இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. இதனை அதிமுக புறநகர் மாவட்ட கழக பொருளாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சௌந்தரராஜன் துவக்கி வைத்தார்.
இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் போட்டி நடைபெற்றது.
வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக பதிணைந்தாயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக ஏழாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியினை சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
















