ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் பினாகா ஏவுகணை சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நடத்தியது.
ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு பின், நீண்ட துாரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் பினாகா ஏவுகணை சோதனையை டிஆர்டிஓ நிறுவனம் வெற்றிகரமாக நடத்தியது.
அதிகபட்சமாக 120 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் இந்த ஏவுகணை, திட்டமிட்டபடி தனது இலக்கை துல்லியமாக தாக்கியது. தொடர்ந்து வெற்றிகரமாக சோதனை மேற்கொண்ட டிஆர்டிஓ நிறுவனத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.
















