சென்னை காமராஜர் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஆயிரத்து 285 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை காமராஜர் சாலையில் 4வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர்.
இந்தநிலையில் அவர்களில் ஆயிரத்து 285 பேர் மீது அண்ணாசதுக்கம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் சட்டவிரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல். அரசின் உத்தரவுகளை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
















