சீர்திருத்த எக்ஸ்பிரஸில் இந்தியா ஏறியுள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2025ம் ஆண்டில் இந்தியா கண்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பல்வேறு துறைகளில் புதிய சீர்திருத்தங்களை கண்டிருப்பது நமது வளர்ச்சிப் பயணத்திற்கு உத்வேகம் அளித்துள்ளதாகவும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளை அவை மேம்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி வரி குறைப்பு, 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி ரத்து, 100 நாட்கள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியது உள்ளிட்ட முக்கிய திட்டங்களை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மோடி, இந்தியா சீர்திருத்த எக்ஸ்பிரஸில் ஏறியுள்ளதாகப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
















