நடப்பாண்டில் சென்னை மண்டலத்தில் மட்டும் 2 ஆயிரத்து 362 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் போதைப்பொருள் இல்லா இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை மண்டலத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதில் 2 ஆயிரத்து 344 கிலோ கஞ்சா, 11 கிலோ செயற்கை போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சுங்க புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் மூலம் 7 கிலோ 600 கிராம் கொகைன் கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 6 பேருக்கு சொந்தமான 12 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது ஹைட்ரோபோனிக் கஞ்சா மற்றும் மருந்து சார்ந்த போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















