ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த வைகுண்ட ஏகாதசி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
டெக்சாஸ் மாகாணத்தில் பியர்லாண்ட் பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில், அமெரிக்காவின் மூன்றாவது பழமையான இந்து கோயிலாகும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வடிவமைப்பைப் பின்பற்றிக் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயிலில், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி போன்ற பண்டிகைகள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
கோயில் தலைவர் சுந்தர் தலைமையில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















