காஞ்சிபுரம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டூர் கிராமத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை வருகை தந்தார்.
அப்போது, கிராம மக்கள் அவரை சூழ்ந்து கொண்டு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சூழ்நிலையை அறிந்த செல்வப்பெருந்தகை, உடனே காரில் ஏறிச்செல்ல முற்பட்டார். இதனை அடுத்து, காரை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், கட்சி நிர்வாகிகள், மக்களை கலைத்து, செல்வப்பெருந்தகையை வழியனுப்பி வைத்தனர்.
















