முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 20ஆம் தேதி ஆளுநர் உரையுடன் நடைபெறவுள்ள நிலையில், வரும் 6ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் கோரிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பாகக் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















