2026ஆம் ஆண்டும் ஜனவரி 1 முதல் 7ஆம் தேதி வரை ஒரு வாரம் வேட்டி வாரம் கொண்டாடப்படும் என ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான வேட்டி வாரத்தை முன்னிட்டு திருப்பூரில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில் ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான புதிய ரக வேட்டி, சட்டைகள அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய ரக வேட்டி சட்டைகளை அறிமுகப்படுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாகராஜன், 7வது ஆண்டாக வேட்டி வாரத்தை கொண்டாடவுள்ளதாகத் தெரிவித்தார்.
புதிய ரக வேட்டி-சட்டைகள் அனைத்து ராம்ராஜ் கிளைகளிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நமது சுதேசி மற்றும் கலாச்சாரம் வளர இளைஞர்கள் வேட்டி வாரத்தில் பங்கெடுத்து நெசவாளர்கள் வாழ்வை சிறக்க வைக்க வேண்டும் என நாகராஜன் கேட்டுக்கொண்டார்.
















