சுவிட்சர்லாந்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட அசம்பாவிதத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கிரான்ஸ் – மொன்டானாவில் உள்ள பார் ஒன்றில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
எனினும் இந்த அசம்பாவிதத்தில் 40 பேர் வரை உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
















