சாணார்பட்டி காவல் நிலையம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற வடமாநில நபரை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள அடகுக்கடையின் மாடியில் ஒடிசாவைச் சேர்ந்த கோவிந்த ஷா என்பவர் தூங்கிக் கொண்டிருந்தார்.
இதனை கண்ட, அடகு கடைக்காரர் திருடன் என்று நினைத்து விரட்டியுள்ளார். இதனால், பயந்துபோன கோவிந்த ஷா அருகே உள்ள காவல் நிலையத்தின் மேல்தளத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை அறிந்த போலீசார், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் வலைவிரித்து தயாராக நின்றிருந்தனர்.
அப்போது, காவல்நிலையத்தின் மேல்தளத்திற்கு சென்ற 2 தீயணைப்பு வீரர்கள் தற்கொலைக்கு முயன்ற நபரை லாவகமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
















