வங்க தேச வீரர் முஸ்தஃபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஐபிஎல் 2026 மினி ஏலத்தில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரகுமானை 9 கோடியே 20 லட்சம் ரூபாய் என்ற பெரும் தொகைக்கு ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. ஆனால், வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலைக் காரணம் காட்டி, அவரை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கக் கூடாது என பாஜக உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரகுமானை அணியிலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ அதிரடியாக உத்தரவிட்டது. முஸ்தஃபிசுர் ரகுமானுக்கு பதிலாக வேறு வீரரை நியமிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
இதனையடுத்து முஸ்தஃபிசுர் ரகுமானை விடுவித்துள்ளதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அறிவித்துள்ளது.
















