நெல்லையப்பர் கோயிலில் மகா ம்ருத்யுஞ்ஜய மந்திர ஜப வேள்வி வெகு விமரிசையாக நடைபெற்றது.
நெல்லை டவுன் பகுதியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில், இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் மகா மிருத்யுஞ்ஜய மந்திர ஜப வேள்வி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், 25ஆம் ஆண்டு ஜப வேள்வியை செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிய சத்தியஞான தேசிக பரமாச்சாரியா சுவாமிகள், குரு மகா சன்னிதானம் செங்கோல் ஆதீனம், தருமபுரம் திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், பரசமய கௌளரிநாத ஆதினம் புத்தாத்மானந்த சரஸ்வதி பரமாச்சாரியார் சுவாமிகள், கள்ளக்குறிச்சி வேலாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியா சுவாமிகள், நெல்லை மேலமடம் வித்தியேஸ்வர நடராஜ சிவாச்சாரியார் சுவாமிகள், நெல்லை இளைய பட்டம் உமா மகேஸ்வர சிவாச்சாரியா சுவாமிகள், பனையூர் மாதாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த வேள்வியில் கல்லூரி மாணவர்கள் உட்பட 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
















