சென்னை திருமுல்லைவாயலில் நிறுத்தப்பட்டிருந்த ஐயப்ப பக்தர்களின் கார் மீது அரசு பேருந்து மோதியதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
திருமுல்லைவாயலில் ஐயப்ப பக்தர்களை சபரிமலைக்கு அழைத்து செல்வதற்காக டூரிஸ்ட் வாகனம் வந்துள்ளது. அப்போது முனுசாமி என்பவர் பூக்களை கொண்டு டூரிஸ்ட் வாகனத்தை அலங்கரித்து கொண்டிருந்தார்.
அச்சமயத்தில் அவ்வழியாக வந்த அரசு பேருந்து, நின்று கொண்டிருந்த டூரிஸ்ட் வாகனம் மீது மோதியது. மேலும் அடுத்தடுத்து மற்றொரு கார், இருசக்கர வாகனம் மீதும் பேருந்து மோதியது. இதில் ஐயப்ப பக்தர் முனுசாமி, 2 குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் பன்னீர்செல்வத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















