வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், வெனிசுலாவில் சமீபத்திய நடவடிக்கைகள் கவலையளிப்பதாக தெரிவக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவின் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதிசெய்து, பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளை அமைதியான முறையில் தீர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் அழைக்கிறோம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெனிசுலா மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்புக்கு இந்தியா தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
















