ரஷ்யாவுடனான வர்த்தகம் காரணமாக இந்தியா மீதான வரியை மிக விரைவில் மேலும் உயர்த்த முடியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக கூறி, சில மாதங்களுக்கு முன் இந்தியா மீது 50% கூடுதல் வரிகளை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பிரதமர் மோடி மிகவும் நல்ல மனிதர் என கூறினார்.
ரஷ்ய எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் தான் மகிழ்ச்சியாக இல்லை என்பதை பிரதமர் மோடி அறிந்திருந்தார் என கூறிய டிரம்ப், என்னை மகிழ்ச்சியடைய செய்யும் நடவடிக்கை முக்கியம் என தெரிவித்தார்.
















