திண்டுக்கல் மாவட்டம் பழனி கிரிவலப்பாதையில் சாலையோர வியாபாரிகளை, வியாபாரம் செய்ய அனுமதிக்க கோரி தேவஸ்தான அலுவலகத்தை திமுகவினர் முற்றுகையிட முயன்றனர்.
போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக பழனி முருகன் கோயில் கிரிவலப்பாதையில் உள்ள சாலையோர கடைகளை, தேவஸ்தானம் அகற்றியது.
இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி, அங்குள்ள தேவஸ்தான அலுவலகம் முன்பு திமுகவினர் குவிந்தனர்.
இவ்விவகாரத்தில் 2 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுகவினர், தேர்தலுக்காக வியாபாரிகளை ஏமாற்றுவதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்
















