திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், வாடகை தொகை செலுத்த முடியவில்லை என கூறி, அரசு தரிசு நிலத்தில் கிராம மக்கள் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர்
வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குருசாமி பள்ளம் கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. சொந்த வீடு இல்லாததன் காரணமாக அவர்கள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர்.
மேலும் வாடகை தொகை உயர்வு காரணமாக அவர்கள் அடிக்கடி வீடுகளை மாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் தங்களால் வாடகை தொகை செலுத்த முடியவில்லை என கூறி குருசாமி பள்ளம் கிராமம் அருகே உள்ள அரசு தரிசு நிலத்தில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தற்காலிகமாக கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர்.
அரசு தங்களின் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் இலவச வீட்டு மனை வழங்கி அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
















