தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடனை திருப்பி செலுத்த முடியாததால், மூதாட்டி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்
வரதராஜபுரம் கிராமத்தை சேர்ந்த பஞ்சம்மாள் என்பவரின் மகன் ரஞ்ஜித், தனியார் நிதி நிறுவனத்தில் 25 லட்சம் ரொக்கம் கடன் பெற்றுள்ளார்.
கடன் தொகையை சரிவர செலுத்த முடியாததால், அவரின் வீட்டில் நிதி நிறுவன ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். அதில் கடனை திருப்பி அடைக்காவிட்டால் வீடு ஜப்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் நிதி நிறுவன ஊழியர்கள், ரஞ்ஜித்தின் குடும்பத்தினரை திட்டியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மகன் வெளியூருக்கு சென்றிருந்தபோது பஞ்சம்மாள், தனது பேத்திக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் அருந்தியுள்ளார்.
தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பஞ்சம்மாள், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நிதி நிறுவன ஊழியர்கள் மாயாண்டி, கண்ணன், கார்த்திக், சேது ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
















