கூட்டணி குறித்து முடிவெடுக்க டிடிவி தினகரனுக்கு முழு அதிகாரம் வழங்கி அமமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தஞ்சையில் நடைபெற்ற அமமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில்,தமிழகத்திற்கென்று தனியாக சாதி வாரி கணக்கெடுப்பை திமுக அரசு நடத்த வேண்டும் எனவும்
திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் மற்றும் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை மீண்டும் தேர்வு செய்தும் சிறப்பு தீர்மானம் நிறைவேறியது.
















