எல்லை பகுதியில் நான்கு மடங்கு வேகத்தில் சீனா உட்கட்டமைப்புகளை உருவாக்கி வரும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்திய – சீன உறவு தொடர்பாக லண்டனை தலைமையிடமாக கொண்டு வெளிவரும் தி எகானமிஸ்ட் பத்திரிகை செயற்கைக்கோள் புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது. இதில், 2024க்கு பிறகு இந்தியா – சீனா இடையே பதற்றம் தணிந்துள்ளது என்றும், தற்போது குளிர்காலம் துவங்கியுள்ளதால் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே திரும்பப் பெறப்பட்ட படைகளைத் தவிர, மற்ற படைகள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லையில் பதற்றத்தை சீன அரசு தணித்திருந்தாலும், அப்பகுதிகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் சாலைகள், பாலங்கள், கிராமங்கள் மற்றும் ராணுவ உதவியுடன் கட்டுமானத்தை விரைவுபடுத்தியுள்ளது என்றும், இந்தியாவை விட நான்கு மடங்கு வேகத்தில் உட்கட்டமைப்பை சீனா மேற்கொண்டு வருவதாகவும் தி எனாகமிஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதனிடையே, சீனாவுக்கு இணையாக, நமது படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், முன்பைவிட இருநாடுகளுக்கு இடையே உறவு சீராக உள்ளது எனவும் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















