ஆரோவில்லில் மேற்கொள்ளப்படும் ஆன்மிகம் மற்றும் வளர்ச்சி பணிகளை நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினர்கள், புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் ஆய்வு மேற்கொண்டனர்.
யூனிட்டி பெவிலியனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட குழுவினரிடம், காணொளி மூலம் உரையாடிய ஆரோவில் அறக்கட்டளை செயலர் ஜெயந்தி எஸ்.ரவி, வளர்ச்சி திட்டங்கள் குறித்து விரிவான விளக்கமளித்தார்.
அப்போது, ஆரோவில் நிர்வாகத்தின் பணிகளை எம்.பி. ரம்பன் மொக்காரியா, எம்.எல்.ஏ ஹரிபாய் படேல் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.
















