“தீபத்தூணை சுடுகாட்டுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் ரகுபதியை பதவிநீக்கம் செய்க” முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் வலியுறுத்தல்
அதேபோல், தீபத்தூணை சுடுகாட்டுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் ரகுபதியை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர், நீதிமன்றம் தீர்ப்பை எப்படி வழங்க வேண்டும் என அமைச்சர் ரகுபதி அறிவுரை வழங்குவதுபோல் பேசியிருப்பது, முற்றிலும் நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று விமர்சித்துள்ளார்.
மேலும், சுடுகாட்டை கோயிலுடனும், தீபத்தூணுடனும் ஒப்பிடுவது மன்னிக்க முடியாத குற்றம் எனக்கூறிய அவர்,
மத நல்லிணக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் எண்ணத்தை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
















