திருச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மோடி பொங்கலை தொடங்கி வைத்த நிலையில், சேலத்திலும் பாஜகவினர் மோடி பொங்கல் வைத்து கொண்டாடினர்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், தமிழக மக்கள் அனைவரும் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
அந்த வகையில், சேலம் அழகாபுரம் மண்டல பாஜக சார்பில் இன்று பொங்கல் கொண்டாடப்பட்டது. பாஜகவை சேர்ந்த மகளிரணி நிர்வாகிகள், உற்சாகமாக பொங்கல் வைத்து கொண்டாடினர்.
பிறகு, சிறப்பு பூஜைகள் செய்து, விழாவில் பங்கேற்றவர்களுக்கு பொங்கல் விநியோகிக்கப்பட்டது. மேலும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
















