திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் ஈட்டி வீரம்பாளையம் குமரன் குன்று முருகன் கோயிலை அகற்ற, இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து கோவை காந்திபுரம் சிக்னல் அருகே இந்து முன்னணியினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
இதேபோல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி அமைப்பினர் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தாக்கப்பட்டதற்கு அவர்கள் கண்டன முழக்கமிட்டனர்.
















