சென்னை வடபழனியில் மத்திய ஜவுளி துறையின் சார்பில் சணல் மார்க் இந்தியா திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் ஜவுளி குழுவின் இணை இயக்குநர் முரளிதரன், தமிழ்நாடு கைத்தறித் துறை துணை இயக்குநர் ரகுநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முரளிதரன், உற்பத்தி செய்யப்படும் சணல் பொருட்களுக்கு 50 சதவீதம் அளவிற்கு மிகாமல் சணல் இருந்தால் மட்டுமே தரச் சான்றிதழ் வழங்கப்படும் என்று கூறினார்.
















