நெல்லையில் போலி பத்திரங்கள் மூலம் திமுக நிர்வாகி 60 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.
நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர், சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார்.
இவரது தந்தைக்கு சொந்தமான நிலத்தை திமுக நிர்வாகி கிரகாம்பெல் உள்ளிட்டோர் போலி பத்திரங்களை தயார் செய்து நிலத்தை அபகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து டிஜிபி அலுவலகம், முதலமைச்சர் தனிப்பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் திமுக நிர்வாகியால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
















