சென்னை மதுரவாயல் பகுதியில் வீலிங் செய்து விபரீத ரீல்ஸ் வீடியோ எடுத்த வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரவாயல் பைபாஸ் சாலையில் பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசங்கள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் நீண்ட நாட்களாக பைக் சாகசம் செய்யும் இளைஞர் ஒருவரை விரைந்து பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பைக்கில் முன் சக்கரத்தை தூக்கிக்கொண்டு வீலிங் செய்து ரீல்ஸ் வெளியிடுவதை அந்த இளைஞர் தொடர்ந்து செய்து வருவதால் சாலையில் செல்லும் சக வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.
இவ்வாறு சாகசங்கள் செய்யும் நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்சார் கேமராக்களும் அமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
















