2025-26-ம் ஆண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 4 சதவீதமாக உயரும் என மத்திய அரசு கணித்துள்ளது.
2025- 2026 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த முதல்கட்ட மதிப்பீடு விவரங்களை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டது.
அதில், கடந்த ஆண்டுகளில் 6 புள்ளி 5 ஆக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம், 2025-26-ம் ஆண்டில் 7 புள்ளி 4 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி துறையின் வளர்ச்சியானது 4 புள்ளி 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















