சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்களால் நஷ்டம் அடைவதாக குற்றஞ்சாட்டி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொங்கல் தொகுப்புடன் முழு நீள கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அருகே 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
இங்குள்ள கரும்புகளை நேரடியாக கொள்முதல் செய்ய அரசு அதிகாரிகள் வராத நிலையில் இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் கரும்பு ஒன்றுக்கு 15 ரூபாய் மட்டுமே வழங்குவதால் விவசாயிகள் நஷ்டம் அடைவதாகவும், இடைத் தரகர்கள் லாபம் அடைவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
















