சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர்கள் 850 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களையும் இணைக்க வேண்டும், ஓய்வுபெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு குறைந்தபட்சமாக 15 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்றது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 850 ஊராட்சி செயலாளர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வடக்கு கடற்கரை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
















