கொடைக்கானலில் ரோப் கார் சேவை அமைப்பது தொடர்பான சாத்திய கூறுகள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
கொடைக்கானல் உலகளவில் பிரபல சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இதனால் ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனவே அதனை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, வட்டக்கானல் முதல் கும்பக்கரை வரை 8 கிலோ மீட்டர் தூரம் வரை ரோப் கார் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்தனர்.
















